உளுந்தூர்பேட்டை அருகே சமுத்திர குளத்தில் பாழடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. பயன்பாடு இன்றி உள்ள இந்த மேல்நிலை நீர் தேக்க தொட்டி தற்போது எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாயம் உள்ளது. எனவே விபரீதம் ஏதும் ஏற்படும் முன் அந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.