உளுந்தூர்பேட்டை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விளைபொருட்களை விற்பனை செய்த விவசாயிகளுக்கு கடந்த 60 நாட்களாக பணம் பட்டுவாடா செய்யப்படவில்லை. இதனால் விவசாயிகள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இது குறித்து புகார் அளித்தும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே விவசாயிகள் நலன் கருதி அவர்களுக்கு உடனடியாக பணம் பட்டு வாடா செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?