சென்னை தாம்பரம் சானடோரியம் ரெயில் நிலையம் அருகே ஜி.எஸ்.டி. சாலை சுரங்கப்பாதை இருக்கும் பகுதியில் , தெரு நாய்களின் தொல்லை அதிகமாக இருக்கிறது. குறிப்பாக இரவு நேரத்தில் இந்த சாலையை கடந்து செல்லவே அச்சமாக உள்ளது. சாலையில் தனியாக யாரும் சென்றால் தெருநாய்கள் கூட்டமாக நின்று குரைப்பதும், துரத்துவதும் போன்ற சம்பவங்கள் அன்றாடம் நடக்கிறது. எனவே மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து தெரு நாய்கள் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்.