பாதியில் நின்ற பணியால் அவதி

Update: 2022-06-18 14:44 GMT
சென்னை அம்பத்தூர் ஹஜி நகர், கள்ளிக்குப்பம் பகுதியில் நடந்து வரும் மழைநீர் வடிகால் பணி பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது.வேலைகள் பாதியில் நின்றதால் சாலையோரங்களில் பள்ளங்களாக உள்ளன. இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கும், பாதசாரிகளுக்கும் பெரும் இடையூறாக உள்ளது. மேலும் இந்த பள்ளத்தில் மாடு ஒன்று மாட்டி கொண்டு, வெளியே வராமல் சிரமப்பட்டதும் குறிப்பிடதக்கது. அதிகாரிகள் வடிகால் பணியை விரைந்து முடித்து திறந்திருக்கும் வடிகால்களை மூட வேண்டுகிறோம்.

மேலும் செய்திகள்