சென்னை மந்தவெளி தெரு, ஆஞ்சநேயர் கோவில் அருகே உள்ள கடைகளையொட்டி புகைப்பிடிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கூட்டமாக கூடி புகைபிடிக்கிறார்கள். அருகில் பள்ளியும், கோவிலும் இருப்பதால் குழந்தைகள், பெண்கள் என பெரும்பாலானோர் செல்லும் வழியில் புகைபிடிப்பதால் தொடர்ந்து துர்நாற்றம் வீசுகிறது. இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?