பெங்களூரு சம்பங்கிராம் நகர் ராஜா ராம் மோகன்ராய் சாலையின் ஓரத்தில் நடைபாதை உள்ளது. இந்த நடைபாதையை அந்த பகுதி மக்கள் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் அந்த நடைபாதையின் நடுவே மின்கம்பம் ஒன்று உள்ளது. மேலும், அந்த மின்கம்பத்தில் கேபிள் வயர்கள் தொங்கும் வகையில் உள்ளது. இதனால் அந்த நடைபாதையில் செல்லும் பாதசாரிகள் மிகவும் அவதி அடைகின்றனர். எனவே அதிகாரிகள் அந்த கேபிள் வயர்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.