சென்னை திருவான்மியூர் டைடல் பூங்கா பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை இல்லை. இதனால் பஸ்சுக்காக காத்திருக்கும் மக்கள் பல்வேறு சிரமங்களை அனுபவிக்கிறார்கள். இது வெயில் காலம் என்பதால், நீண்ட நேரமாக பஸ்சுக்காக காத்திருக்கும் மக்கள் வெயிலில் நிற்க முடியாமல் மயக்கம் போட்டு விழும் சம்பவங்களும் இங்கு அரங்கேறுகின்றன. மேற்கூறிய பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?