நடவடிக்கை எடுப்பார்களா?

Update: 2022-08-10 13:58 GMT

சேலம் கன்னங்குறிச்சியில் பஸ் நிலையம் அருகே தனியார் பள்ளிக்கூடம் உள்ளது. இந்த பள்ளியில் 100  -க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்தநிலையில் இரவு நேரத்தில் இந்த பள்ளி வளாகத்தில் மர்ம நபர்கள் புகுந்து மது அருந்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதனால் பள்ளி வளாகத்தில் காலி பாட்டில்கள் உடைந்து சிதறி கிடக்கிறது. எனவே மாணவர்களின் நலன் கருதி பள்ளிக்கூடத்தில் மது அருந்தும் நபர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்