குறுவட்ட அளவர் அலுவலகம் திறக்கப்படுமா?

Update: 2022-08-09 12:07 GMT
மயிலாடுதுறை பகுதி பெசன்ட்நகர் பூங்கா அருகே ரோஜா தெருவில் குறுவட்ட அளவர் அலுவலகம் மற்றும் குடியிருப்பு கட்டப்பட்டு திறக்கப்படாமல் உள்ளது. இதனால் அந்த கட்டிடத்தை சுற்றி செடி,கொடிகள் வளர்ந்து புதர்மண்டி கிடக்கிறது. இதன் காரணமாக கட்டிடம் விஷப்பூச்சிகளின் கூடாரமாக மாறிவருகிறது. மேலும், கட்டிடத்தில் மதுபிரியர்கள் அமர்ந்து மதுகுடிப்பதை வாடிக்கையாக்கி வருகின்றனர். இதனால் அந்த பகுதியை பெண்கள், குழந்தைகள் அச்சத்துடன் கடந்து சென்று வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள குறுவட்ட அளவர் அலுவலகத்தை திறக்க நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்