அம்பத்தூர் ஓட்டி பஸ் நிலையத்தில் இதுவரையில் இயங்கி கொண்டிருந்த கழிப்பறை சமீபத்தில் இடிக்கப்பட்டது. அந்த இடத்தை புதிதாக யாரும் ஆக்கிரமிப்பு செய்வதற்க்கு முன் அதே இடத்தில் நவீன கழிப்பறை கட்டி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். அம்பத்தூர் பஸ் நிலையத்துக்கு தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் வந்து செல்வதால், சம்பந்தபட்ட அதிகாரிகள் உடனடியாக இதற்கொரு நிரந்தர தீர்வு வழங்க வேண்டும்.