குரங்குகள் தொல்லை

Update: 2022-08-09 11:23 GMT

சேலம் மாவட்டம் எடப்பாடி  9 -வது வார்டு க.புதூர் பகுதியில் குரங்குகள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கூட்டம் கூட்டமாக சுற்றித்திரியும் குரங்குகள் அங்குள்ள குழந்தைகள், பெரியோர்கள் பயமுறுத்தி வருகின்றன. மேலும் சாலையில் சுற்றித்திரியும் தெருநாய்களையும் கடித்து நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. பொதுமக்கள் நலன் கருதி குரங்குகளை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்