நாமக்கல் மாவட்டம் மலைக்கோட்டை அடிவாரத்தில் கமலாலய குளம் உள்ளது. சமீபத்தில் பெய்த மழை காரணமாக தற்போது இந்த குளம் நிரம்பிய நிலையில் தண்ணீர் உள்ளது. இந்த குளத்திற்கு குளக்கரை திடலில் உள்ள எம்.ஜி.ஆர். பூங்கா வழியாக செல்ல வழி உள்ளது. இந்த வழியாக வரும் சிறுவர், சிறுமிகள் குளத்தில் இறங்கி தண்ணீரில் விளையாடுவதை பார்க்க முடிகிறது. இவர்கள் கால்தவறி விழுந்தால் அசம்பாவிதங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.எனவே குழந்தைகள் பாதுகாப்பு கருதி சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.