சென்னை பெசன்ட்நகர் அஷ்டலட்சுமி கோவில் பின்புறம் உள்ள இலவச கழிப்பிடத்தில் கட்டாய கட்டணமாக ரூபாய் 5 முதல் 30 வரை வசூலிக்கப்படுகிறது. இது பற்றி பக்தர்கள் மற்றும் பொது மக்கள் காரணம் கேட்டால் சேவை கட்டணம் என்று பதிலளிக்கிறார்கள . இலவசம் என்ற வாசகம் எழுதிவைத்துவிட்டு கட்டணம் வசூலிப்பத்தால், ஏழை எளிய மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். சம்பந்தப்பட்ட துறை இது தொடர்பாக நடவடிக்கை எடுக்குமா?