சென்னை வில்லிவாக்கம் குமாரசாமி நகர் பகுதியில் தெருநாய்களின் தொல்லை அதிகரித்துக்கொண்டே வருகிறது. சாலையில் நடந்து செல்பவர்களை துரத்துவது, வாகனத்தில் செல்பவர்களை பார்த்து குரைப்பது போன்ற சம்பவங்கள் தினந்தோறும் நடக்கிறது. மேலும் இந்த பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் இருசக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோக்களின் இருக்கைகளை தெருநாய்கள் கிழிப்பது போன்ற சம்பவங்களும் அரங்கேறுகிறது. இதனால் இந்த பகுதியை கடந்து செல்லவே அச்சமாக இருக்கிறது. நாய்கள் தொல்லைக்கு தீர்வு என்னவோ!