பெயர் பலகை வைக்க கோரிக்கை

Update: 2022-08-08 14:41 GMT

திருச்சி மாநகராட்சி பாத்திமாபுரம் ஒன்றில் இருந்து 7-வது தெரு வரை ஆயிரம் பேர்களுக்கு மேல் வசிக்கின்றனர். இந்த தெருக்களுக்கு இதுவரை பெயர் பலகை வைக்கப்படவில்லை. இதனால் வெளியிலிருந்து ஆட்டோ போன்ற வாகனங்களில் வருபவர்கள் விலாசத்தைக் கண்டுபிடிக்க சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுத்து தெரு பெயர்பலகை வைக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்