சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகள்

Update: 2022-08-08 14:20 GMT
சேலம் மாநகரில் கோட்டை மெயின் ரோட்டில் மாடுகள், குதிரைகள் சர்வ சாதாரணமாக சுற்றி திரிவதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. சில நேரங்களில் சாலையின் நடுவே அவைகள் படுத்துக்கொள்வதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைகின்றனர். மேலும் அவைகள் சாலையில் சண்டை போடும் போது வாகன ஓட்டிகள் மீது மோதுவதால் அவர்கள் கீழே விழுந்து காயம் அடைகின்றனர். எனவே சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளை பிடிப்பதுடன் அவற்றின் உரிமையாளர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

மயான வசதி