புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி மற்றும் சுற்று வட்டார கிராம மக்கள் ஆயிரக்கணக்கானோர் தினந்தோறும் நகருக்குள் வந்து செல்வது வழக்கமாக உள்ளது. ஆலங்குடியில் மத்திய, மாநில அரசு அலுவலகங்களும் இயங்கி வருகின்றன. இந்நிலையில் ஆலங்குடிக்கு வந்து செல்லும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், திருட்டை தடுக்கும் வகையிலும் ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. தற்போது இவை வயர்கள் பிய்ந்தநிலையில் பயனற்றி நிலையில் காணப்படுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.