தொழில்நுட்பம் வளர வளர ஆன்லைன் பணபரிமாற்றம்தான் தற்போது அதிகரித்து வருகிறது. சாதாரண பெட்டிக்கடை, தள்ளுவண்டி, சைக்கிளில் சென்று ஐஸ் விற்கும் வியாபாரி உள்ளிட்ட அனைவரும் கியூஆர் கோடு மூலம் கூகுள்பே, பே-டியம் உள்ளிட்ட செயலிகள் மூலம் வாங்கிய பொருட்களுக்கு பணபரிமாற்றம் செய்கிறார்கள். ஆனால், புதுச்சேரி அரசு நிறுவனமான பாண்லே பாலகத்தில் அந்த வசதி இல்லை. எனவே, பாண்லேவிலும் பணத்திற்கு பதிலாக கியூஆர் கோடு மூலம் பணம் செலுத்தும் வசதியை ஏற்படுத்த வேண்டும்.