பந்தலூர் அருகே படச்சேரியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு வனவிலங்குகள் நடமாட்டம் அதிகளவில் உள்ளது. இதனால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர். ஆனால் அங்குள்ள தெருவிளக்குகள் சரிவர ஒளிருவது இல்லை. இதனால் அந்த பகுதியே இரவில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. மேலும் வனவிலங்குகள் ஊருக்குள் புகுந்தால் கூட தெரிவது கிடையாது. எனவே தெருவிளக்கு வசதியை மேம்படுத்த அதிகாரிகள் முன்வர வேண்டும்.