வடிகால் வசதி வேண்டும்

Update: 2022-08-07 13:14 GMT

திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே உள்ள தோளூர்பட்டி பகுதியில் சாலை ஓரத்தில் மழைநீர் செல்ல வடிகால் வசதி இல்லாததால் மழை பெய்யும்போது மழைநீர் செல்லவழி இன்றி சாலை ஓரத்தில் உள்ள பள்ளங்களில் தேங்கி நிற்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் தேங்கி நிற்கும் மழைநீரில் அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி இப்பகுதியில் மர்ம காய்ச்சல் பரவ அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்