குரங்குகள் அட்டகாசம்

Update: 2022-08-04 14:46 GMT

 பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, வி.களத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட மேட்டுச்சேரி கிராம பஸ் நிலையத்தில் பல ஆண்டுகளாக குரங்குகளின் அட்டகாசம் அதிகமாக உள்ளது. இந்த பஸ் நிலையத்திற்கு வரும் பொதுமக்களின் கையில் உள்ள பொருட்களை குரங்குகள் பிடுங்கி செல்கின்றன. இந்த நிலையில் இந்த பஸ் நிலையத்திற்கு வந்து இங்கிருந்து பஸ் ஏறி செல்லும் பள்ளி மாணவ-மாணவிகள் பெரிதும் அச்சப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்