பெரம்பலூர் மாவட்டம், பாடாலூர் ஊராட்சி அன்னை மேல்நிலைப்பள்ளிக்கு செல்லும் வழியில் சுமார் 15 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. மேலும் இப்பகுதியில் உள்ள சுடுகாட்டிற்கு செல்ல சாலைவசதி இன்றி தற்போது பெய்த மழையின் காரணமாக சேறும், சகதியுமாக காணப்படுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.