பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட எருமாடு அருகே பள்ளி சந்திப்பு பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிகளவில் உள்ளது. இங்கு சாலையோரத்தில் காணப்படும் குப்பை தொட்டியில் கிடக்கும் கழிவுகளை அவை வெளியே எடுத்து சாலை வரை சிதறடிக்கின்றன. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதோடு கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் அந்த வழியாக செல்பவர்களை துரத்தி துரத்தி கடிக்க முயல்கின்றன. எனவே தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும்.