காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர், வாடாதவூர் பகுதியில் நூலகம் ஒன்று அமைக்கப்பட்டது. ஆனால் நீண்டகாலமாகவே இந்த நூலகம் பூட்டியபடியே காட்சி தருகிறது. இதனால் எங்கள் பகுதியில் உள்ள மாணவ மாணவியர்கள் நூலகத்தை பயன்படுத்த முடியாமல் சிரமப்படுகிறார்கள். மேலும் நூலக கட்டிடத்தின் முன்பு வைக்கோல்கள் கொட்டப்பட்டு இருப்பதால், அந்த இடமே அலங்கோலமாக காட்சியளிக்கிறது. எனவே சம்பந்தபட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து நூலகத்தை மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரவேண்டும்.