சென்னை பெரியமேடு தனியார் மருத்துவமனை இருக்கும் சாலையில் புதிதாக கட்டப்பட்ட நிலையில் ரேஷன் கடை உள்ளது. அனைத்து கட்டிட வேலைகளும் முடிவடைந்து 3 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் இன்னும் இந்த ரேஷன் கடை திறக்கப்படாமல் உள்ளது. விரைவில் ரேஷன் கடை திறக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்