திருச்சி-திண்டுக்கல் சாலையில் இரவு, பகல் நேரங்களில் கால்நடைகள் சுற்றித்திரிகின்றன. இதில் ஒருசில கால்நடைகள் சாலையில் படுத்துக்கொள்வதினால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். மேலும் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது. இரவு நேரத்தில் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் சாலையில் படுத்திருக்கும் கால்நடைகள் மீது மோதி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.