தெருப்பலகையில் சுவரொட்டிகள்

Update: 2022-05-24 14:18 GMT
சென்னை வியாசர்பாடி, மேல்பட்டி பொன்னப்பன் தெரு, தீயணைப்பு நிலையம் அருகில் இருக்கும் ஸ்ரீராம் நகரின் பெயர் பலகையில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது. தெருவின் பெயரே தெரியாத வகையில் ஒட்டப்பட்டிருக்கும் சுவரொட்டிகளால் கூரியர் கொடுக்க வருபவர்கள், தெருவிற்கு புதிதாக குடிவந்தவர்கள் சிரமப்படும் சூழ்நிலை அமைகிறது. தெரு பெயர்பலகையில் சுவரொட்டிகள் ஒட்டப்படுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு அறிவித்தும் இது போன்ற நிகழ்வுகள் நடப்பது வேதனையளிக்கிறது.

மேலும் செய்திகள்