சென்னை கோடம்பாக்கம் பிரபல கல்யாண மண்டபம் எதிரில் உள்ள அரசு பொது மொபைல் கழிப்பறை நிறுவப்பட்டு நீண்ட நாட்கள் ஆகியும் பயன்பாட்டிற்கு வராமல் இருப்பது தொடர்பாக 'தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியானது. மாநகராட்சி அதிகாரிகளின் விரைவான நடவடிக்கையால் மொபைல் கழிப்பறை அகற்றப்பட்டுள்ளது. சீரிய நடவடிக்கை மேற்கொண்ட மாநகராட்சி நிர்வாகத்துக்கும், துணைபுரிந்த 'தினத்தந்தி'க்கும் மக்கள் நன்றியை தெரிவித்துள்ளனர்.