சென்னை பள்ளிக்கரனை பகுதியிலுள்ள அரசு மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள நிழற்குடை கூரையின்றி இருப்பது தொடர்பாக தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியானது. இதற்கு தீர்வு கிடைக்கும் விதமாக நிழற்குடையின் கூரை சரி செய்யப்பட்டுள்ளது. அதிகாரிகளின் சீரிய நடவடிக்கைக்கும், துணைபுரிந்த தினத்தந்திக்கும் மக்கள் பாராட்டை தெரிவித்துள்ளனர்.