சென்னை அம்பத்தூர், பானு நகர் 16-வது அவென்யூ பகுதியில் மழைநீர் வடிகாலுக்காக பள்ளம் தோண்டப்பட்டது. ஆனால் 10 மாதங்கள் ஆகியும் அந்த பள்ளம் மூடப்படாமல் உள்ளதால் கழிவுநீர் தேங்கி வருகிறது. மேலும் இந்த பள்ளம் தெருவின் முனையில் இருப்பதால் எதிர்பாராத விபத்துக்கள் ஏற்படவும் வாய்ப்புக்கள் இருக்கிறது. எனவே சம்பந்தபட்ட அதிகாரிகள் இந்த பள்ளத்தை விரைவில் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.