சென்னை வில்லிவாக்கம் எஸ்.ஆர்.பி. நகர் 8-வது தெருவில் தெருநாய்களின் தொல்லை அதிகமாக இருக்கிறது. இரவு வேளையில் இந்த தெருவில் நடந்து சென்றாலே நாய்கள் துரத்துவது வாடிக்கையாகி வருகிறது. மேலும் மோட்டர் சைக்கிளில் செல்பவர்களை நாய்கள் கடிக்க வருவதால் விபத்துக்களும் ஏற்படுகிறது. எனவே நாய்களின் தொல்லைக்கு நிரந்தர தீர்வு கிடைக்குமா?