சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் அடுத்த ஏ.என்.மங்கலத்தில் ஏரி உள்ளது. அந்த பகுதியை சுற்றிலும் ஏராளமான தெருநாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றுவதால் தொல்லையாக இருக்கின்றன. அந்த தெருநாய்கள் சாலையின் குறுக்கே ஓடுவதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி காயம் அடைகின்றனர். மேலும் நடந்து செல்பவர்களை துரத்தி துரத்தி கடிக்கின்றன. இதனால் சிறுவர்கள் அந்த பகுதிகளில் அச்சத்துடனே செல்கின்றனர். பொதுமக்கள் பாதுகாப்பு கருதி அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுத்து தெருநாய்களை பிடித்து செல்ல வேண்டும்.
-குணபிரியா, ஏ.என்.மங்கலம், சேலம்.