மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவில் பகுதி வள்ளுவர் தெரு, விளக்கு முகத்தெரு, இந்திரா நகர், ரெயில்வே ரோடு, மருவத்தூர், மேல்பாதி, அண்ணா நகர், கீழத்தெரு, நெய்குப்பை பகுதிகளில் பன்றிகள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இவை சாலையில் அங்கும், இங்கும் கூட்டமாக சுற்றித்திரிவதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். மேலும், கழிவுநீரில் புரண்டு எழுந்து வரும் பன்றிகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்துவிடுகின்றன. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு மட்டுமின்றி தொற்றுநோய்கள் பரவும் அபாயத்தை ஏற்படுத்துகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சுற்றித்திரியும் பன்றிகளை பிடித்து செல்ல நடவடிக்கை எடுப்பார்களா?