கூடலூர் கே.கே. நகர் பகுதியில் உள்ள நடைபாதை உடைந்து காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக நடந்து செல்லும் மாணவ-மாணவிகள், வயதானவர்கள் தவறி விழுந்து காயம் அடையும் நிலை உள்ளது. மேலும் புதர் செடிகள் அடர்ந்து வளர்ந்து உள்ளது. இதனால் அங்கு விஷ ஜந்துகள் நடமாட வாய்ப்பு இருக்கிறது. எனவே அந்த நடைபாதையை சீரமைத்து, புதர் செடிகளை வெட்டி அகற்ற அதிகாரிகள் முன்வர வேண்டும்.