பந்தலூர் தாலுகா அய்யன்கொல்லி அருகே மூலக்கடையில் பயணிகள் நிழற்குடை உள்ளது. இதன் அருகே உள்ள குப்பை தொட்டியை ஒட்டி முட்புதர்கள் அடர்ந்து வளர்ந்து உள்ளன. இதனால் அங்கு பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துகள் பதுங்கி இருக்கின்றன. இதன் காரணமாக அங்கு வந்து செல்லும் பயணிகள் மற்றும் குப்பை கொட்ட வரும் பொதுமக்கள் அச்சப்படுகிறார்கள். எனவே முட்புதர்களை உடனடியாக வெட்டி அகற்ற முன்வர வேண்டும்.