சென்னை சூளைமேடு லோகநாதன் நகர் முதல் தெருவில் உள்ள மழைநீர் வடிகால்வாயின் மூடி சேதமடைந்துள்ளது தொடர்பாக 'தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியானது. இதற்கு தீர்வு கிடைக்கும் விதமாக வடிகால்வாயின் மூடி சரி செய்யப்பட்டது. இதனால் மகிழ்ச்சி அடைந்த மக்கள், உடனடி நடவடிக்கை எடுத்த மாநகராட்சி நிர்வாகத்துக்கும், துணைபுரிந்த 'தினத்தந்தி'க்கும் நன்றியை தெரிவித்துள்ளனர்.