தஞ்சை பழைய மாரியம்மன் கோலில் சாலை ஜெபமாலை மாதா கோவில் தெருவில் கொசு தொல்லை அதிகளவில் உள்ளது. இதனால் அந்த பகுதியில் உள்ள குழந்தைகள், பெரியவர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக இரவு நேரங்களில் கொசுக்களின் தொல்லை கட்டுக்கடங்காத நிலையில் உள்ளது. இதன் காரணமாக குழந்தைகள், மாணவ-மாணவிகள் அடிக்கடி தொற்று நோய்களுக்கு ஆளாகிவருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் கொசுமருந்து அடிக்க நடவடிக்கை எடுப்பார்களா?