புதர் செடிகள் அகற்றப்படுமா?

Update: 2022-07-30 12:55 GMT

பந்தலூர் தாலுகா அரசு உயர்நிலை பள்ளியில் சுமார் 600 குழந்தைகள் பயின்று வருகின்றனர். ஆனால் பள்ளி அருகே உள்ள புதர் செடிகளை வெட்டுவதற்கு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் தினமும் குழந்தைகள் நடந்து செல்லும் வழியில் பாம்பு, பன்றி உள்ளிட்டவை உலா வருகிறது. எனவே பள்ளியை சுற்றி வளர்ந்துள்ள புதர் செடிகளை வெட்டி அகற்ற சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்