சேலம் மாவட்டம் செந்தாரப்பட்டி பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. தெருநாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிவதுடன் நடந்து செல்பவர்கள், வாகன ஓட்டிகளை துரத்தி துரத்தி கடிக்கின்றன. இதனால் குழந்தைகள் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படுகிறார்கள். மேலும் இரவு நேரத்தில் சண்டை போடுவதால் தூங்க கூட முடியவில்லை. பொதுமக்கள் பாதுகாப்பு கருதி அதிகாரிகள் தெருநாய்களை பிடித்து செல்ல நடவடிக்கை எடுப்பார்களா?
-நேருபூபதி, செந்தாரப்பட்டி, சேலம்.