மயிலாடுதுறை பகுதி சேந்தங்குடி சுடுகாட்டில் மதுப்பிரியர்கள் அதிகளவில் குவிந்துவருகின்றனர். இவர்கள் அங்குள்ள கல்லறைகள் மீது அமர்ந்து மது குடிப்பதை வாடிக்கையாக்கி வருகின்றனர். இதனால் அந்த வழியாக வேலைக்கு செல்லும் பெண்கள், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். மேலும், மது குடித்துவிட்டு பாட்டில்கள், டம்ளர்களை கல்லறைகள் மீது குவித்து வைக்கின்றனர். இதனால் இறந்வர்களின் உடல்களை சுடுகாட்டுக்கு கொண்டு வருபவர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மதுப்பிரியர்கள் சுடுகாட்டில் கூடுவதை தடுக்க நடவடிக்கை எடுப்பார்களா?