தெருநாய்கள் தொல்லை

Update: 2022-07-29 12:42 GMT

திருச்சி ஏர்போர்ட் காமராஜ் நகர் பகுதியில் சுமார் ஆயிரம் குடும்பங்களுக்கு மேல் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் அதிக அளவில் தெரு நாய்களின் தொல்லைகள் இருந்து வருகிறது. இதனை மாநகராட்சிக்கு பலமுறை புகார் அளித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாதநிலையில், தற்போது நாய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் பள்ளிக்கு செல்லும் சிறார்கள் இப்பகுதியில் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்