கூடலூரில் இருந்து கோழிக்கோடு செல்லும் நெடுஞ்சாலையில் நாடுகாணி பகுதி உள்ளது. இங்குள்ள பெட்ரோல் நிலையத்தில் இருந்து தேவாலா அட்டிக்கு தார்சாலை செல்கிறது. இதில் நெடுஞ்சாலையோரம் வணிக கட்டிடங்கள் மீது முறிந்து விழும் வகையில் ஆபத்தான மரக்கிளைகள் காணப்படுகிறது. இதன் மூலம் விபத்துகளும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. தொடர்ந்து கட்டிடங்கள் மீது மரக்கிளைகள் எந்த நேரத்திலும் விழும் அபாயத்தில் உள்ளது. எனவே ஆபத்தான மரக்கிளைகளை வெட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.