பன்றிகள் தொல்லை

Update: 2022-07-29 11:35 GMT

நாகை பாரதிதாசன் அரசு கல்லூரி அருகே கிழக்கு கடற்கரை சாலையோரத்தில் இறைச்சி கழிவுகள், குப்பைகள் அதிகளவில் கொட்டப்படுகிறது. இதன் காரணமாக அந்த பகுதியில் பன்றிகள் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இவை சாலையில் அங்கும், இங்கும் ஓடுவதால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துகளில் சிக்கிக்கொள்கின்றனர். மேலும், பன்றிகள் கழிவுகளை கிளறுவதால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இதன் காரணமாக அந்த பகுதியை பொதுமக்கள், மாணவ-மாணவிகள், வாகன ஓட்டிகள் மூக்கை மூடியபடி கடந்து சென்று வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்கவும், பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்தவும் நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்