மயிலாடுதுறை மாவட்டம் குளிச்சார் கிராமம் வடக்குவெளி பகுதியில் குடமடத்து கண்ணி பாசன வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்கால் முறையான பராமரிப்பின்றி செடி,கொடிகள், புற்கள் வளர்ந்து காடுபோல் காட்சி அளிக்கிறது. இதனால் பாசன வாய்க்காலில் இருந்து விவசாய நிலங்களுக்கு தண்ணீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்த பகுதி விவசாயிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள பாசன வாய்க்காலை தூர்வார நடவடிக்கை எடுப்பார்களா?