சென்னை புளியந்தோப்பு பட்டாளம் சிவராவ் சாலையில் இருக்கும் பெயர் பலகையில் அந்த சாலையின் பெயரோ, தெரு பெயரோ தெரியாத அளவிற்கு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு, கிழிக்கப்பட்டும் உள்ளன. இதனால் இந்த சாலையில் செல்பவர்கள் சாலையின் பெயரே தெரியாமல் அவதிக்குள்ளாவது வாடிக்கையாகி வருகிறது. தெரு பெயர் பலகையில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டால் அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி தெரிவித்தும், இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பெயர் பலகையும் பராமரிக்கப்பட வேண்டும்.