திருச்சி மாவட்டம், துறையூர் அருகே உள்ள தீரன்நகரில் ஊர்புற நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு கடந்த சில ஆண்டுகளாக பராமரிப்பு பணிகள், மின் இணைப்பு போன்று வசதிகள் செய்து தரப்படாததால் வாசகர்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். புத்தகங்கள் முறையாக வைக்க அலமாரிகள் இல்லாமல் குப்பை போல் அங்கும், இங்குமாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.