சென்னை சோழிங்கநல்லூர் நியூ குமரன் நகர் பகுதியில் உள்ள குளத்தில் குப்பைகள் கொட்டப்படுவது வாடிக்கையாகி வருகிறது. குளத்தை சுற்றியுள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் குப்பைகளை குளத்திலும் அதன் அருகிலேயும் தான் தொடர்ந்து கொட்டுகின்றனர். இதனால் குளமே அலங்கோலமாக காட்சியளிக்கிறது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கவனித்து குப்பைகள் கொட்டப்படுவதை தடுப்பதற்கும், குளத்தை பராமரிப்பதற்கும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.