சுத்தமலை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்கள், விவசாயிகள் அரசின் நலத்திட்டங்களை தெரிந்து கொண்டு அதனை எவ்வாறு பெற்று பயன் அடைவது என்பதை அறிந்து கொள்ள ஏதுவாக கிராமம் தோறும் கிராம சேவை மையம் அமைக்கப்பட்டது. அந்த வகையில் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு சுத்தமலை கிராமத்தில் அரசு பணம் மூலம் கட்டப்பட்ட கிராம சேவை மைய கட்டிடம் இதுவரை திறக்கப்படாமல் பூட்டி கிடக்கிறது. இதனால் அக்கிராம பகுதி மக்கள் அரசின் திட்டங்கள் பற்றி தெரிந்து கொள்ள முடியாமலும் அதனை பெற முடியாமலும் தவித்து வருகின்றனர்.எனவே கிராம சேவை மையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.