பந்தலூர் தாலுகா கொளப்பள்ளியில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. சாலையில் நடந்து செல்லும் மாணவ-மாணவிகள், பொதுமக்களை கடிக்க முயல்கிறது. இதனால் அச்சத்துடன் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. மேலும் இரவு நேர பஸ்சுக்குள் தெருநாய்கள் சென்று பயணிகள், ஓட்டுனர் இருக்கைகளில் படுத்து அசுத்தம் செய்து வருகிறது. எனவே தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.