சென்னை என்.4 பஸ் நிறுத்தம் மற்றும் என்.4 காவல் நிலையம் அருகே உள்ள பாலகிருஷ்ணன் தெருவின் பெயர் பலகையில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது. தெருவின் பெயரே தெரியாத வகையில் ஒட்டப்பட்டிருக்கும் சுவரொட்டிகளால் இந்த தெருவிற்கு கூரியர் கொடுக்க வருபவர்கள், மற்றும் தெருவிற்கு புதிதாக குடி பெயர்ந்தவர்கள் சிரமத்தை அனுபவிக்கிறார்கள். எனவே இந்த பிரச்சினை நிரந்தரமாக தீர வழி என்னவோ?